முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி: லாரி ஓட்டுநர் கைது

புதுக்கடை அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை மடக்கிய உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்றதாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே காவல் உதவி ஆய்வாளர் எட்வர்ட் பிரைட் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிக கற்கள் ஏற்றி வந்த லாரியை மடக்கியபோது, உதவி ஆய்வாளர் மீது லாரியை ஏற்றி லாரி ஓட்டுநர் கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து முகத்தில் சிறிது காயங்களுடன் தப்பிய உதவி ஆய்வாளர் எட்வர்ட் பிரைட், குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து லாரி ஓட்டுநர் ராம்கியை கைது செய்த போலீசார், கல்குவாரி உரிமையாளர் மற்றும் வாகன உரிமையாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராகிறாரா நவ்ஜோத் சிங் சித்து?

Gayathri Venkatesan

சிறார்களுக்கு தடுப்பூசி; தமிழ்நாட்டில் 73% நிறைவு

Halley Karthik

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Ezhilarasan