முக்கியச் செய்திகள் தமிழகம்

மரக்கன்றுடன் பள்ளிக்கு வந்த மாணவி: வாழ்த்து தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி

மரக்கன்றுடன் பள்ளிக்கு வந்த மாணவிக்கு சு.வெங்கடேசன் எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில், 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ஆம் வகுப்பு வரைக்கான வகுப்புகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

“விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப்போல வரவேற்பு கொடுங்கள்” என்று அவர் கேட்டுக்கொண்டிருந்தார். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகங்கள் செய்திருந்தன. அதன்படி இன்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டதும் அந்தந்தப் பகுதி எம்.எல்.ஏக்கள், எம்.பி, மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாணவ, மாணவிகளை வரவேற்றனர்.

இந்நிலையில், மதுரையில் பள்ளிக்கு வந்த மாணவர்களை சு.வெங்கடேசன் எம்.பி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது காயத்ரி என்ற மாணவி தனது பிறந்த நாள் என்பதால், பள்ளிக்கு மரக்கன்றுடன் வந்திருந்தார். அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இதை ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

‘பள்ளி வழக்கப்படி மாணவி காயத்ரி தனது பிறந்தநாள் என்பதால் இரண்டு வருட இடைவெளிக்கு பின்னரும் பள்ளிகூடும் நாளில் மறவாமல் பள்ளிக்கு வரும் பொழுது மரக்கன்றுடன் வந்திருந்தார். மரக்கன்றோடு பள்ளிக்கு வருகை தந்த மாணவி காயத்ரிக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்’ என்று கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு!

Saravana

தலிபான்களிடம் சரணடைந்த பஞ்ச்ஷிர் போராளிகள்

Saravana Kumar

தமிழ்நாட்டில் 70% பேருக்கு டெல்டா வகை கொரோனா: பொது சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்

Halley karthi