முக்கியச் செய்திகள் தமிழகம்

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை

தீபாவளிக்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊா்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக வழக்கமாக இயக்கப் படும் 2,100 பேருந்துகளுடன் 1,285 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. இதற்காக சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிறுத்தத்தில் 2 முன்பதிவு மையங்களும் திறக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில், தீபாவளி வியாழக்கிழமை என்பதால் அதற்கடுத்த நாளையும் விடுமுறை நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 4.11.2021 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விழாவை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக 5.11.2021 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பில் இருந்தும் கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன. அதை அரசு கவனமுடன் பரிசீலித்து தீபாவளிக்கு அடுத்த நாளான 5.11.2021 அன்று உள்ளூர் விடுமுறை அளித்தும் அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 20.11.2021 அன்று பணி நாளாக அறிவித்தும் ஆணை வெளியிடுப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை என்பதால் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

கோவாக்சினை அவசரகால பயன்பாட்டிற்காக சேர்க்க கோரிய விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்பு!

Gayathri Venkatesan

இயல்பை விட அதிக மழை; தமிழ்நாட்டிற்கு எச்சரிக்கை

Halley karthi

நியாய விலைக்கடையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு!

Gayathri Venkatesan