முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தலைமறைவான மாணவிகள்; சில மணி நேரங்களில் மீட்ட போலீஸ்!

சேலத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தலைமறைவான மாணவிகளை போலீசார் சில மணி நேரங்களில் மீட்டுப் பெற்றோருடன் ஒப்படைத்துள்ளனர்.

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நகரமலை அடிவாரத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மூன்று மாணவிகள் வகுப்புகள் முடிந்த பிறகு வீட்டுக்குச் செல்லாமல், பள்ளி அறையில் தனித்தனியாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தலைமறைவாகினர். இது தொடர்பாகப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சூரமங்கலம் காவல்துறையினர் கடிதத்தைக் கைப்பற்றிக் காணாமல் போன மூன்று மாணவிகளையும் தேடிவந்தனர். இந்நிலையில், அந்த கடிதத்தில் நாங்கள் யாரையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை எனவும், பள்ளி நிர்வாகம் எந்த வகையிலும் காரணம் இல்லை எனவும் எழுதி வைத்துள்ளதாக போலீசார் தரப்பில் சொல்லப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனிடையே சம்பந்தப்பட்ட பள்ளியில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டம் முழுவதும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது சேலம் ஓமலூர் செல்லும் பேருந்தில் நடத்துநர் கைப்பேசியிலிருந்து காணாமல் போன மாணவி ஒருவர், தனது உறவினருக்குத் தொடர்பு கொண்டதைக் கண்டுபிடித்த, போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாணவிகளை மீட்டு பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

‘அண்மைச் செய்தி: ‘75வது சுதந்திர தினம்-மக்களுக்குச் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்’

மாணவிகளிடம் நடத்திய விசாரணையில், கல்வியின் அழுத்தம் காரணமாகச் சென்றதாக மாணவிகள் கூறியதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா மாணவிகளுக்கு கவுன்சிலிங் வழங்கி, பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் முன்னிலையில் படிப்பில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று கூறி பெற்றோர்களுடன் மாணவிகளை போலீசார் அனுப்பி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவுடன் அமைதியான நல்லுறவை விரும்புகிறோம்: பாகிஸ்தான்

Mohan Dass

இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

Arivazhagan Chinnasamy

மாவீரன் படத்திற்காக பத்திரிக்கையாளராக மாறிய அதிதி சங்கர்

EZHILARASAN D