கோவில்பட்டி அருகே டாட்டா ஏசி வாகனம் விபத்துக்குள்ளானதில் 8 மாத குழந்தை உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு, தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியிலிருந்து 20-க்கும் மேற்பட்ட ஆண், பெண் மற்றும் குழந்தைகள் டாட்டா ஏசி சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறை அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து 108 வாகனத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அங்குள்ளவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அண்மைச் செய்தி: ‘75வது சுதந்திர தினம்-மக்களுக்குச் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்’
இந்நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 மாத குழந்தை கபிலீஸ் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆபத்தான நிலையில் உள்ள 2 குழந்தைகள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.








