சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் விவசாயி எனும் நான் படக் குழுவினர் நியூஸ் 7 தமிழுக்குச் சிறப்பு பேட்டியளித்தனர்.
ஆர்.கே.எஸ் தயாரிப்பில் ஜி முருகானந்தம் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரமாக பருத்தி வீரன் சரவணன் மற்றும் அறிமுக நடிகர் பூவரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் விவசாயி எனும் நான். சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் விவசாயி எனும் நான் படக் குழுவினர் நியூஸ் 7 தமிழுக்குச் சிறப்பு பேட்டியளித்தனர். அப்போது பேசிய பருத்தி வீரன் சரவணன், இந்த படம் மண் சார்ந்த விவசாயத்தின் படம் விவசாயம் எவ்வளவு முக்கியமானது என்பதைக் கூறும் படம் எனக் கூறினார்.
அப்போது, பருத்தி வீரன் சித்தப்பா கதாபாத்திரம் போலவே மீண்டும் ஒரு படமாக எதிர்பார்க்கலாமா எனக் கேட்டபோது, பதினாறு வயதினிலே படத்தை மீண்டும் எடுக்க முடியுமா? சிவப்பு ரோஜாக்கள் எடுக்க முடியுமா? அலைகள் ஓய்வதில்லை எடுக்க முடியுமா? அது போலவே பருத்தி வீரன் ஒரு காலத்தால் மறக்க முடியாத ஒரு படம் அது மாதிரியான படம் இயக்குநர் அமீர் மீண்டும் எடுக்க நினைத்தால் கூட முடியாது கூறினார்.
அண்மைச் செய்தி: ‘கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தலைமறைவான மாணவிகள்; சில மணி நேரங்களில் மீட்ட போலீஸ்!’
தொடர்ந்து பேசிய அவர், மீண்டும் அதே மண் சார்ந்த படத்தில் நடிகர் கார்த்தி, விருமன் படத்தில் நடித்துள்ளார். இந்த சமயத்தில் அவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பருத்தி வீரன் சரவணன் தெரிவித்தார்.








