முக்கியச் செய்திகள் தமிழகம்

75வது சுதந்திர தினம்-மக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா என அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசிய கொடியை ஏற்றி தேசப்பக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் விதமாக சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பூக்கடை மார்க்கெட் மற்றும் பாண்டி பஜார் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு தேசியக்கொடி தட்டுப்பாடின்றி கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் கடைகளில் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை தேசிய கொடியினை ஏற்றி வைக்கவும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பின்னர் மூவர்ண தேசிய கொடியினை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை அடுத்து தேசிய கொடியின் விற்பனை அதிகரித்துள்ளதாக கடை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்த வருடம் முழுவதும் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எற்பாடு செய்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து நாட்டின் 75 பகுதிகளில் 75 வாரங்களுக்கு இந்த கொண்டாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்துவது, நாட்டில் உள்ள 75 கடற்கரைகளை சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும்- பதவியேற்ற பின் நிதிஷ்குமார் பேட்டி

Web Editor

காலிப்பணியிடங்களை அறிவித்தது இந்திய ரயில்வேத்துறை!

Jeba Arul Robinson

’நேஷனல் க்ரஷ்-ங்கறதை நிரூபிக்கிறாரே’: இன்ஸ்டாவில் இப்படி அசத்தும் ராஷ்மிகா

Gayathri Venkatesan