இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக; மாணவர்களே நமது எதிர்காலம். அவர்களின் குரல்கள் பரிவு, கண்ணியம் மற்றும் மரியாதையுடன் கேட்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் தன்னம்பிக்கை, நேர்மை மற்றும் நம்பிக்கையைத் தூண்டும் ஒரு கல்வி முறை கிடைக்க வேண்டும். அந்த எதிர்காலத்திற்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சிஜேபி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் மாணவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது பரவலான கண்டனங்களை பெற்று வருகிறது.




