சீருடை அணிந்து பள்ளிக்கு வந்தபின் அனைத்து மாணவர்களும் ஒன்று தான் -அமைச்சர் அன்பில் மகேஸ்

சீருடை அணிந்து பள்ளிக்கு வந்த பின் அனைத்து மாணவர்களும் ஒன்று தான் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  பேசினார். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு…

சீருடை அணிந்து பள்ளிக்கு வந்த பின் அனைத்து மாணவர்களும் ஒன்று தான் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  பேசினார்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு காலை பள்ளி மாணவர்கள் கூடி சைகை மொழிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  தமிழக முதலமைச்சர் அறிவுரைப்படி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்ற அவர், என் உருவத்தை வரைந்து பரிசளித்த மாணவிக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் சிரிப்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரை பார்க்கிறோம் என்றவர், சைகை மூலம் தமிழ் தாய் வாழ்த்து பாடியதற்கு ஒட்டு மொத்த தமிழ் சமூகம் சார்பில் நன்றிர. தனி கவனம் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையானவற்றைச் செய்து வருகிறோம். முதலமைச்சர் வாழ்த்து செய்தியில் அனைவருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்று சொன்னார்.

அதை சிறப்பாகச் செய்ய தான் செயல்பட்டு வருகிறோம் கல்வி மட்டும் தான் சமத்துவம் வளர்வதற்கான முக்கிய ஆயுதம். மாற்றுத்திறனாளிகளைப் பெற்ற பெற்றோர்கள் கடவுளுக்கு சமம். தயவு செய்து நம் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். பள்ளிக்கூடத்தில் வாங்கும் மதிப்பெண் மட்டுமே அவர்களின் திறமையை மதிப்பீடு செய்யாது, ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் திறமை இருக்கும் என்று முதலமைச்சர் சொல்வார் என பேசினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.