வெண்ணிலா கபடி குழு நடிகர் காலமானார்; திரைத்துறையினர் இரங்கல்

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த நடிகர் ஹரிவைரவன் உடல்நலக்குறைவால் காலமானார். மதுரையை சேர்ந்த நடிகரான ஹரிவைரவன் (38) வெண்ணிலா கபடி குழு-1 மற்றும் வெண்ணிலா கபடி குழு -2 , குள்ளநரிக் கூட்டம்…

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த நடிகர் ஹரிவைரவன் உடல்நலக்குறைவால் காலமானார்.

மதுரையை சேர்ந்த நடிகரான ஹரிவைரவன் (38) வெண்ணிலா கபடி குழு-1 மற்றும் வெண்ணிலா கபடி குழு -2 , குள்ளநரிக் கூட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.
வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் விஷ்ணு விஷாலின் நண்பராகக் கபடி குழுவில் நடித்த நடிகரான ஹரிவைரவனின் நடிப்பு அந்த திரைப்படத்தின் முக்கிய இடம் பிடித்து ரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெற்று படத்தின் வெற்றிக்கு உதவியது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் திடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் கிட்னியில் பிரச்சனை இருப்பதாகக் கூறப்பட்டது. அதற்கான சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார் . நடிகர் ஹரிவைரவனின் உடலானது மதுரை கடச்சனேந்தல் முல்லைநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு கவிதா (30) என்ற பெண்ணுடன் திருமணமாகிய நிலையில் 2 வயதில் யோஷினிஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளது. நடிகர் ஹரிவைரவனின் ஊதியத்தை வைத்து மட்டுமே குடும்பத்தை நடத்திவந்த ஹரிவைரவனின் மனைவி தற்போது உடைந்த  வீட்டில் வசித்துவரும் நிலையில் வாழ்வாதாரமாக இருந்து தனது கனவரின் மறைவால் செய்வதறியாது நிற்கிறார்.

தமிழ்நாடு நடிகர் சங்கம் உயிரிழந்த நடிகர் ஹரிவைரவனின் குழந்தை மற்றும் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்குப் பொருளாதார ரீதியாக உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என ஹரிவைரவனின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடிகர் ஹரிவைரவன் காலமான நிலையில் நடிகர்கள் விஷ்ணுவிஷால், திரைப்பட இயக்குநர் பாலாஜி மற்றும் நடிகர்கள் அம்பானி சங்கர், பிளாக் பாண்டி உள்ளிட்ட நடிகர் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.