7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் சாட்ஜிபிடி பயன்படுத்தி வீட்டுப்பாடம் எழுதி ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டதற்கு, ’வருங்காலத்திற்கு வரவேற்கிறேன்’ என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தொழிநுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் நாள்தோறும் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் சமீபத்தில் உருவான ChatGPT தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட OpenAI-ன் ChatGPT, உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்து, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சாட்ஜிபிடி என்றழைக்கப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு சாட்பாட் (Chatbot), நாம் வைக்கும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் கேள்விகளுக்கு, பதில்களை கொடுக்கும் ஒரு விரிவான மொழிக் கருவியாகும். இது, தொழில்நுட்பத்தில் ஏற்படும் பரிணாம வளர்ச்சியின் புதிய நிலைகளுக்கு, நம்மை தயார்படுத்தி வருகிறது.
இந்தியாவில் நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வில் தோல்வியடைந்த சாட்ஜிபிடி, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (MBA) திட்டத்தின் இறுதித் தேர்விலும், அமெரிக்க மருத்துவத் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருந்தது.
Welcome to the future😂😻 https://t.co/ZX0RqgCV2x
— A.R.Rahman (@arrahman) June 2, 2023
இந்நிலையில், வால்நட் நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான ரோஷன் படேல், தனது ட்விட்டர் பக்கத்தில், 7 ஆம் வகுப்பு படிக்கும் தனது உறவினர், சாட்ஜிபிடியை பயன்படுத்தி வீட்டுப்பாடம் எழுதி ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டதாக பதிவிட்டுள்ளார். இதனை டேக் செய்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ’வருங்காலத்திற்கு வரவேற்கிறேன்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.