முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள் விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : வாய்ப்பை இழக்கும் பாகிஸ்தான்?

இந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் இழக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் இதனை ஏற்று, தொடருக்கான பணிகளை தொடங்கியது. ஆனால், இந்த தொடரில் பங்கேற்க இருந்த இந்திய அணி, பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வராத பட்சத்தில், நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வராது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுபுறம் தெரிவித்தது.

இந்திய அணி இல்லாத ஆசிய கோப்பை தொடரை நடத்தும் பட்சத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் பெருமளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கிரிக்கெட் சங்கத்திடம் இதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து கேட்டது. அதே சமையம் இந்திய அணியும், பாகிஸ்தானில் ஆசிய கோப்பை நடைபெற்றால், அதில் பங்கேற்காது என ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையிட்டிருந்தது.

இதனை கருத்தில் கொண்ட ACC, துபாயில் இந்தியாவுக்கான போட்டிகளை நடத்தும் வகையிலும், மற்ற போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தும் வகையிலும் வடிவமைக்கும்படி கோரிக்கை வைத்தது. எனவே ஆசிய கோப்பை போட்டிகளுக்கான அட்டவணையை தயார் செய்ய வேண்டி வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தியது.

அந்த பேச்சுவார்த்தையில் இந்திய அணியை மற்ற அணிகள் சந்திக்கும் போட்டியை மட்டும், மற்ற நாடுகளில் வைத்துக் கொள்ளுமாறும், மீதமுள்ள போட்டிகள் மட்டும் பாகிஸ்தானில் விளையாடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து சிந்தித்த வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இந்த அட்டவணைக்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : சாட்ஜிபிடி உதவியுடன் வீட்டுப்பாடம் எழுதி ஆசிரியரிடம் சிக்கிய மாணவன் – ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்ட நகைச்சுவை ட்வீட்!

ஒருவேளை இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடவில்லை என்றால், ஆசிய கோப்பை தொடர் நடத்தப்பட வாய்ப்பு மிக மிக குறைவு எனவும், குறிப்பாக ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஸ்பான்ஸர்கள் இதில் விருப்பம் தெரிவிக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் நடைபெறவில்லை என்றால் ஒட்டுமொத்த ஆசிய கோப்பை தொடரே நடைபெறாமல் போய்விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram