முக்கியச் செய்திகள் தமிழகம்

“மாணவி லாவண்யா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்”

திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் தஞ்சை மாணவி உயிரிழப்பு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா, விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார். இதற்கு மதம் மாற வற்புறுத்தியதும், கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லி துன்புறுத்தியதும் தான் மாணவி லாவண்யாவின் இறப்புக்கு காரணம் என பாஜக கூறியிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தஞ்சை மாணவி உயிரிழப்பு வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி, பாஜக சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சியாக இருக்கும் போது எதற்கு எடுத்தாலும் சிபிஐ விசாரணை வேண்டும் என கூறிய ஸ்டாலின் தற்போது இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற அஞ்சுவது ஏன் என கேள்வியெழுப்பினார்.’

அண்மைச் செய்தி: கண்கவர் அணிவகுப்புகளுடன் டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

மேலும், தஞ்சை மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை விட மாட்டோம் என்ற அண்ணாமலை, மாணவியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். தவறினால் பாஜக, உண்டியல் குலுக்கியாவது ஒரு கோடி ரூபாயை வழங்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மல்லிகார்ஜுன கார்கே

Web Editor

புதிய மேல்நிலைப் பள்ளிகள்: என்ன சொல்கிறார் அமைச்சர்? 

EZHILARASAN D

ராமேஸ்வரத்தில் உள்ள விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

Arivazhagan Chinnasamy