முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

குலாம் நபி ஆசாத்துக்கு பத்மபூஷண்; மீண்டும் காங்கிரஸில் சலசலப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் உட்பட 128 பேருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை நேற்று அறிவித்தது.
ஆனால், புத்ததேவ் பட்டாச்சார்யா தனக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விருதை நிராகரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

பத்மபூஷண் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, யாரும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் எனக்கு பத்மபூஷண் கொடுத்திருந்தால், நான் அதை நிராகரிக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதே மாநிலத்தை சேர்ந்த தபேலா இசைக்கலைஞர் பண்டித் அனிந்தோ சாட்டர்ஜி, பின்னணி பாடகி சந்தியா முகோபத்தய் ஆகியோரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையெல்லாம் விட காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது விவாதங்களை உண்டாக்கியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் மூத்த தலைவர்களில் முக்கியமானவர் குலாம் நபி ஆசாத். அவர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும் அண்மையில் நீக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில்தான் அவருக்கு வழங்கப்பட்ட விருது காங்கிரஸுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குலாம் நபி ஆசாத்துக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் “குலாம் நபி ஆசாத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஒருவரின் பொதுசேவை மற்றொரு தரப்பு அரசால் கூட அங்கீகரிக்கப்படுவது நல்லது. குலாம் நபி ஆசாத் பிரதமரை கண்ணீரில் மூழ்கடித்த ஒரே காங்கிரஸ்காரர்” என்று தெரிவித்துள்ளார்.
பட்டாச்சார்யாவின் விருது புறக்கணிப்பு செய்தியை ரீட்விட் செய்த மற்றொரு சக காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் குலாம் நபி ஆசாத்தின் பெயரை வைத்தே கடுமையான விமர்சனம் செய்துள்ளார். அவர் ஆசாத்தாக இருக்க விரும்புகிறார் உங்களை போல குலாமாக இருக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்து வரும் சூழ்நிலையில் குலாம் நபி ஆசாத்திற்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ஹெலிகாப்டர் சேவை தொடக்கம் – அமைச்சர் ராமச்சந்திரன்

Web Editor

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு: ஜி கே வாசன் பேட்டி

Web Editor

சிக்கன் பக்கோடா சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்

G SaravanaKumar