பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் எனவும் என்ன விகிதத்தில் ஜிஎஸ்டி விதிப்பது என்பதை மாநிலங்களே ஒன்றுகூடி முடிவு செய்ய வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று (ஜூன் 22) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவில் மறைமுக வரி விதிப்பை மொத்தமாக மாற்றி அமைத்த ஜிஎஸ்டி தொடர்ந்து மெருகேற்றப்படும் அவசியம் இருக்கும் காரணத்தால் ஜிஎஸ்டி குறித்து முடிவெடுக்கும் உச்சக்கட்ட அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சிலின் 53வது கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களுடன் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில் நிலைய நடைமேடை சீட்டுகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (ஜிஎஸ்டி) விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.









