கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக கவலைப்படும் மத்திய பாஜக அரசு, விவசாயிகளுக்காக கவலைப்படவில்லை: ஸ்டாலின்

கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக கவலைப்படும் மத்திய பாஜக அரசு, விவசாயிகளுக்காக கவலைப்படவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உள்ளிட்ட…

கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக கவலைப்படும் மத்திய பாஜக அரசு, விவசாயிகளுக்காக கவலைப்படவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உள்ளிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், திமுக தான் சந்தித்த முதல் தேர்தலிலிருந்து அனைத்து தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு அந்த வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றி வருவதாகக் கூறினார். அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டதாகக் கூறிய மு.க.ஸ்டாலின், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தின் வளர்ச்சி மீட்டெடுக்கப்படும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.