“தமிழகத்தின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் மீட்டெடுக்க திமுகவை ஆதரியுங்கள்”: மு.க. ஸ்டாலின்

தமிழகத்தின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் மீட்டெடுக்க திமுகவை ஆதரிக்குமாறு, மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளையும், தொகுதியில் தாங்கள் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளையும் அச்சிட்டு, துண்டு பிரசுரங்களாக வீடுகள்…

தமிழகத்தின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் மீட்டெடுக்க திமுகவை ஆதரிக்குமாறு, மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளையும், தொகுதியில் தாங்கள் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளையும் அச்சிட்டு, துண்டு பிரசுரங்களாக வீடுகள் தோறும் அளிக்கும் பணியில், அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மதுரவாயல் தொகுதி திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதியை ஆதரித்து, மு.க. ஸ்டாலின் நேற்றிரவு பரப்புரை மேற்கொண்டார். போரூர் நான்கு சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த பரப்புரையின்போது, திமுக ஆட்சியில் போராடி கொண்டுவரப்பட்ட, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், அ.தி.மு.க ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் முழுமை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். தமிழகத்தின் தன்மானத்தையும், சுய மரியாதையையும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதாகக் கூறிய ஸ்டாலின், தமிழகம் இழந்த உரிமையை மீட்க, தி.மு.க.,வுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.