முக்கியச் செய்திகள் இந்தியா

ஜீன்ஸ் அணிவது குறித்து தாம் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோரிய முதல்வர்

உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் கிழிந்த ஜீன்ஸ் அணிவது குறித்து தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

உத்தரகண்ட்டில் தீரத் சிங் ராவத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் சமீபத்தில் ஜீன்ஸ் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அவர் கூறியதாவது; சமீபத்தில் நான் விமானத்தில் பயணம் செய்தபோது என் அருகில் ஒரு பெண் ஒருவர் கிழிந்த் ஜீன்ஸ் அணிந்திருந்தார். அவருடன் 2 குழந்தைகளும் பயணம் செய்தனர். இப்படி உடை அணிந்திருப்பவர் எப்படி மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க முடியும் என தெரிவித்திருந்தார். இவரின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவர் தனது கருத்துக்கு தற்போது மன்னிப்பு கோரியுள்ளார். அதில், நான் தெரிவித்த கருத்து யாருடைய மனதை புன்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஜீன்ஸ் அணிவதில் தவறில்லை. ஆனால், கிழிந்தபடி ஜீன்ஸ் போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் குழுந்தைகளுக்கு நன்மதிப்பை கற்றுத்தர வேண்டும்” என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

பாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சரின் உதவியாளர், பாதுகாப்பு காவலரிடம் விசாரணை!

Ezhilarasan

கலைக்கல்லூரிகள் அமைப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குறுது!

Gayathri Venkatesan

நிபா வைரஸ் குறித்து பதற்றமடைய தேவை இல்லை: ராதாகிருஷ்ணன்

Ezhilarasan