திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்றப்படும் : ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலாவதாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்றப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை…

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலாவதாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்றப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயமாக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மின் கட்டணம், பால், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை கடுமையாக விலை உயர்வு அடைந்திருப்பதாக கூறிய அவர், அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை என சாடினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.