பஞ்சாப் மாநிலம் லுத்தியானாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஜோகிந்தர் சிங் தன் துப்பாக்கியைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளார்.
காவல்துறை அதிகாரி ஜோகிந்தர் சிங் பஞ்சாப் மாநிலத்தில் பஜகவின் மூத்த செய்தித் தொடர்பாளர் அணில் சரினுக்கு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.அவர் தனது துப்பாக்கியைச் சுத்தம் செய்துகொண்டிருந்த போது தவறுதலாகத் தன்னை தானே சுட்டுக் கொண்டதாகத் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து கூடுதல் காவல்துறை ஆணையர் ஜடிந்தர் சிங் கூறுகையில் முதல் கட்ட விசாரணையில் ஜோகிந்தர் சிங் அணில் இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈட்டுப்பட்டிருந்த போது தனது AK-47 ரகத் துப்பாக்கியைச் சுத்தம் செய்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கி தவறுதலாக செயல்படத் தொடங்கி அவர் தலையை துளைத்ததில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.