கடந்த 2019- ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் தேசிய விருதுப் பெற்றதுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாள ‘அசுரன்’ படத்திற்கு சிறந்தப் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 அக்டோபர் மாதம் எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மலையாள திரையுலக முன்னணி கதாநாயகியான மஞ்சுவிற்கு தமிழில் இது முதல் படமாக அமைந்தது. 1980களில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை நுட்பமாக படமாககியிருப்பார் இயக்குனர் வெற்றிமாறன்.
‘அசுரன்’ திரைப்படத்திற்குச் சிறந்த படத்திற்கான 67வது தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் அசுரன் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார் நடிகர் தனுஷ். அந்த பதிவில் அசுரன் படத் தயாரிப்பாளர் தாணு, உடன் நடித்த நடிகர்கள் , இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தனது திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தனுஷ் அனைவருக்கும் அன்பையே பகிருமாறு அறிவுரை கூறியுள்ளார். இதே படத்திற்கான நடிகர் தனுஷிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







