தேங்கி நிற்கும் தண்ணீர்; முடங்கும் போக்குவரத்து

தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை நின்ற பின்னரும் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில்…

தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை நின்ற பின்னரும் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் “தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தண்ணீர் தேங்காமல் இருக்க தீர்வு என்ன?” என நியூஸ் 7 தமிழில் இன்று தொடர் நேரலையை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்கிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை வியாசர்பாடி பொதுமக்கள் கூறியதாவது; அனைத்து பகுதிகளில் இருந்தும் மழை நீர் ஒரே இடத்திற்கு வருவதால் இப்பகுதியில் நீர் தேங்கி அதிக பாதிப்பை உருவாக்குகிறது. அதேபோல அரசுசார்பில் இங்கு பாலம் கட்டிக் கொடுப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், இன்னும் பாலம் கட்டிக் கொடுக்கப்டவில்லை.

பாலம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால், எங்களால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகுகிறது. அரசு விரைந்து கடிக்கொடுத்தால் எங்களுக்கு மழைக்காலங்களில் பெரிதும் உதவியாக இருக்கும். அதேபோல, மழை பெய்யும்போது போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டு சாலைகளை பயன்படுத்த முடியாமல் போகிறது. குழந்தைகளை எங்கையாவது கூட்டிக்கொண்டு செல்வதும் கூட மிகவும் சிரமமானதாக உள்ளது.

கொசு மற்றும், சுகாதாரமற்ற நீர் காரணமாக உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன. இப்பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகால்களை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.