சென்னையில் விடாது பெய்யும் மழை: தாம்பரத்தில் 232.9 மி. மீ மழை பதிவு

சென்னையில் விடாது மழை பெய்துவருவதை அடுத்து, தாம்பரத்தில் 232.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை…

சென்னையில் விடாது மழை பெய்துவருவதை அடுத்து, தாம்பரத்தில் 232.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. விடிய விடிய பெய்த கனமழை காரணமாக, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 232.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சோழவரத்தில் 220 மில்லி மீட்டர், எண்ணூரில் 205 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதேபோல, கும்மிடிபூண்டியில், 184 மில்லி மீட்டர் மழையும், ரெட் ஹில்ஸ் பகுதியில் 180 மில்லி மீட்டர் மழையும் பொழிந்துள்ளது. மேலும், மீனம்பாக்கம் பகுதியில் 158.5 மில்லி மீட்டர் மழையும், விமான நிலையம் பகுதியில் 116 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.