மதுரையில் பாலம் இடிந்து விழுந்து வடமாநில இளைஞர் பலி

மதுரையில் பாலம் இடிந்து விழுந்ததில் வடமாநில இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். மதுரை கோரிப்பாளையத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை புதிய பாலம் கட்டும் பணி, கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதில்…

மதுரையில் பாலம் இடிந்து விழுந்ததில் வடமாநில இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

மதுரை கோரிப்பாளையத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை புதிய பாலம் கட்டும் பணி, கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 40% வேலைகள் முடிவடைந்த நிலையில், ஐயர் பங்களா அருகே பாலம் இன்று திடீரென இடிந்து விழுந்தது.

இதில் கட்டிட வேலையில் இருந்த 2 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். உடனடியாக அவர்களை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒருவருக்கு கை துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகாஷ் சிங் (45) என்ற உத்தரபிரதேச இளை ஞர் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், ’ பாலம் இடிந்த இடத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஒருவர் உயிரிழந்துள்ளார். பாலத்தின் வேலைகள் தொடங்கி 2 முதல் 3 வருடங்கள் நடந்து வருகிறது. இரண்டு நபர்களை தவிர வேறு யாரும் உள்ளே சிக்கி இருக்க வாய்ப்பில்லை என மீட்பு குழுவினர் மற்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்’ என அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.