சென்னை கன மழை; போரூர் பகுதி மக்கள் கோரிக்கை

தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை நின்ற பின்னரும் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில்,…

தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை நின்ற பின்னரும் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், “தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தண்ணீர் தேங்காமல் இருக்க தீர்வு என்ன?” என நியூஸ் 7 தமிழில் இன்று தொடர் நேரலையை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்கிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை போரூர் பொதுமக்கள் கூறியதாவது; நாங்கள் சுமார் 20 ஆண்டு காலமாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். கழுத்து அளவு தண்ணீரில் நாங்கள் இருக்க வேண்டியதாக இருத்தது. தற்போது, இடுப்பு அளவு தண்ணீரில் இருக்கிறோம். இதனால், ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல முடியாத நிலை உண்டாகுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வரும் நீர் போரூர் ஏரிக்கு வருகிறது. ஆனால், போரூர் ஏரியில் இருந்து நீர் வெளியே செல்ல முறையான கால்வாய் வசதி செய்யப்படவில்லை. மழை வரும் முன்பே கால்வாய் அமைத்தால் மழை நீர் இங்கு தேங்காமல் இருக்கும்.
இதனால், வீட்டை விட்டே வெளியே வர முடியாத சூழ்நிலை உண்டாகுகிறது. மின்சாரமும் இரவில் இல்லாமல் போவதால், பாம்பு மற்றும் பூச்சிகள் வருமோ என்ற அச்சம் வருகிறது.

2007 முதல் பல்வேறு கோரிக்களை முன்வைத்து வருகிறோம் ஆனால், இன்னும் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. சுமார் 500 குடும்பங்கள் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
கொசு மற்றும், சுகாதாரமற்ற நீர் காரணமாக உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன. இப்பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகால்களை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.