தருமபுரி மாவட்டம் பி.பள்ளிப்பட்டியில் உள்ள பழமை வாய்ந்த புனித லூர்து அன்னை ஆலய கெபி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், ஏராளமான மக்கள் முழங்கால் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த பையர்நத்தம் அருகே பி.பள்ளிப்பட்டியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த புனித லூர்து அன்னை ஆலயத்தின் கெபித் திருவிழா ஏப்ரல் 21,22, 23. ஆகிய மூன்று நாட்கள் பாஸ்கா நாடகம், இன்னிசை கச்சேரி ,லூர்து அன்னையின் தேர்பவனி உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில், விழாவின் தொடக்கமாக லூர்து அன்னையின் உருவம் பொறித்த கொடியினை ஆலய பங்குமக்கள் ஊர்வலமாக வீடு வீடாக மேளதாள இசை முழங்க வானவேடிக்கையுடன் எடுத்து சென்றனர். அதனை தொடர்ந்து ஆலயத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியை ஏற்றுவதற்கு தருமபுரி முதன்மை மறைமாவட்ட குரு அருள்ராஜ் ,மற்றும் ஆலய பங்குதந்தை உள்ளிட்டோர் கொடிக்கு சிறப்பு ஜெபம் செய்து, கொடி மரத்தில் கொடியை ஏற்றி வைத்தனர். அப்போது அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்களில் சிலர் முழங்கால் மண்டியிட்டு பிராத்தனை செய்தனர்.
—-காமராஜ்







