முக்கியச் செய்திகள் செய்திகள்

இலங்கை அதிபரின் வீட்டைக் கொளுத்திய போராட்டக்காரர்கள்

இலங்கையில் மகிந்த ராஜபக்சே மற்றும் அரசியல்வாதிகளின்  வீட்டை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், இலங்கை அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாக, ராஜபக்சே ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. பிரதமரின் ராஜினாமாவைத் தொடர்ந்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. முன்னதாக, தலைநகர் கொழும்புவில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மகிந்த ராஜபட்சேவின் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 23 பேர் காயமடைந்தனர். அங்கிருந்து அதிபர் அலுவலகம் அருகே உள்ள காலிமுகத் திடலுக்கு வந்த மகிந்தவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி அனைவரையும் கலைந்துபோகத் செய்தனர்.

எம்.பி. பலி: இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் எம்.பி. அமரகீர்த்தி அதுகொரளாவை நிதம்புவாவில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் சூழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அப்போது, போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பிக்க அதுகொரளாவும் அவரது பாதுகாவலரும் அருகே உள்ள கட்டடத்தில் தஞ்சமைடந்ததாகவும், அந்தக் கட்டடத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்த நிலையில் அவர்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தகவல் வெளியானது.

ராஜபக்சே வீ்ட்டுக்குத் தீ: ராஜபக்சேவின் ராஜினாமாவைத் தொடர்ந்து இலங்கையின் குருனகாலாவில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் அதிபரின் வீட்டை அடித்து நொறுக்கி, தீவைத்துக் கொளுத்தினர். தொடர்ந்து, பல அரசியல்வாதிகளின் வீடுகளையும் போராட்டக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தினர்

இதுவரைக்கும் போராட்டக்காரர்கள் எரியூட்டப்பட்ட வீடுகள் விவரம்:

1-சனத் நிஷாந்தவின் வீடுகள்
2- திஸ்ஸ குட்டி ஆராச்சி வீடு
3- குருணாகல மேயர் இல்லம்
4- ஜான்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம்
5- மொரட்டுவாவின் மேயர் இல்லம்
6 – என் அனுஷா பாஸ்குவல் வீடு
7- பிரசன்னா ரணதுங்காவின் வீடு
8- ரமேஷ் பதிரானா வீடு
9- புனித பண்டாராவின் வீடு
10-ராஜபட்சேவின் பெற்றோரின் கல்லறை
நீர்கொழும்பில்
11-அவென்ரா கார்டன் ஹோட்டல்
12- அருந்திகாவின் வீடு
13 கனக ஹேரத்தின் வீடு
14- காமினி லோகுவின் வீடு
15-ரமேஷ் பதிரானாவின் வீடு காலேவில்
16-17 – மொரட்டுவா மேயர் சமன் லாலின் வீடு
லான்சாவின் (2 வீடுகள்)
18- பந்துல குணவர்த்தனவின் வீடு
19 – அலி சப்ரி ரஹீமின் வீடு
20. விமர் வீரவன்ச வீடு.

சுற்றிவளைக்கப்பட்ட இரத்மலான விமான நிலையம்: கொழும்பு – இரத்மலான விமான நிலையம் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அரசாங்கத்தின் குண்டர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. அதனால், முக்கியப் பிரமுகர்கள் வெளிநாடுகள் தப்பிச் செல்லக்கூடும் என்று கருதி ஆர்ப்பாட்டக்காரர்கள் இரத்மலான விமான நிலையத்தைச் சுற்றிவளைத்துள்ளனர். போலீஸார் பலமுறை கண்ணீர் புகை குண்டுகளால் குறிவைக்கப்பட்டும் போராட்டக்காரர்கள பின்வாங்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், கோத்தபய ராஜபட்சே மற்றும் மகிந்த ராஜபட்சே ஆகியோர் தமது குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்குத் தப்பிக்கவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு: நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறையையடுத்து இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக காவல் துறை அறிவித்தது. அதன்படி, தற்போதைய ஊரடங்குச் சட்டம் நாளை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்து மூல அனுமதியின்றி பொது வீதிகள், தொடருந்து மார்க்கங்கள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்களிலும், கடற்கரைகளிலும் பொதுமக்கள் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக அதிபர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

Jayasheeba

பென்னிகுயிக் சிலை திறக்க லண்டன் சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி

Web Editor

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள 8 வயது வீராங்கனை!

Web Editor