முக்கியச் செய்திகள் இந்தியா

தமிழ்நாட்டிற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால், தமிழ்நாட்டிற்கு 4 மாத கை குழந்தையுடன் 5 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகாளக வர தொடங்கியுள்ள நிலையில் மன்னாரை சேர்ந்த கஜேந்திரன், மேரிகிளாரி, நிசாத், கியூரி, எஸ்தர், மோசஸ் உள்ளிட்ட நான்கு மாத கைகுழந்தையுடன் 5 பேர் ஒரு பைப்பர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஸ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து, இந்த தகவலறிந்து இலங்கை தமிழர்களை அழைத்து வர மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சொந்தமான ஹேவர்கிரப்ட் கப்பல் விரைந்துள்ளது. மணல் திட்டில் காலை முதல் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வரும் ஆறு தமிழக இலங்கைத் தமிழர்களை மீட்டு இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் முகாமுக்கு அழைத்து வந்தனர். விசாரணையின் போது, இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி நிலவி வருவதால், அந்த 6 இலங்கை தமிழர்களும் தமிழ்நடிற்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வரக்கூடும் என்பதால் சர்வதோச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என கடலோர் பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒருநாள் போட்டி; இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

Saravana Kumar

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஜூன் 8ஆம் தேதி வெளியீடு!

Jeba Arul Robinson

பல்கலைக்கழக வேந்தராக மம்தா? மேற்கு வங்கத்தில் நிலவும் பிரச்னை என்ன?

Web Editor