மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்!

ஓமலூரில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாமில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அரசு உதவி பெறும்…

ஓமலூரில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாமில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து தேசிய அடையாள அட்டைகள்
வழங்கப்பட்டன.

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அரசு உதவி பெறும் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

சேலம் மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் ஓமலூர் வட்டார வளமையத்தின் சார்பில்,  ஓமலூர்
வட்டாரத்தில் உள்ள மாற்று திறனாளிகள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான
ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது.

முன்னதாக குழந்தைகளின் ஆதார் அட்டைகள் பதிவுகள் செய்து எலும்பு,  தண்டுவடம், கால்,  கண்,  காது,  மூக்கு,  நரம்பு என,ஓமலூர் அரசு மருத்துவமனையின் அனைத்து பிரிவு மருத்துவ நிபுணர்களும் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து பள்ளி குழந்தைகளுக்கு உடலில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்தனர்.

மேலும், கண்,  காது,  மூக்கு,  தொண்டை,  தசைப்பிடிப்பு,  நரம்புப் பிடிப்பு மற்றும் எலும்பு குறைபாடுகள் என அனைத்தையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து குழந்தைகளிடம் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கான வழிமுறைகள், அதற்கான பயிற்சிகள் குறித்து குழந்தைகளின் பெற்றோருக்கு விளக்கம் அளித்தனர்.

இதை தொடர்ந்து மாணவர்களின் குறைபாடுகளுக்கு தகுந்தவாறு தேசிய அடையாள
அட்டைகள் உடனடியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொண்ட மாற்று திறன் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஓமலூர் வட்டார வள மையத்தின் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

ம. ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.