புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியிலுள்ள புகழ்பெற்ற அழகப்பெருமாள் திருக்கோயில் புரட்டாசி மாத லட்சார்ச்சனை விழா சிறப்புடன் நடந்தேறியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தமிழ் மாதங்களில் புரட்டாசி என்றாலே அது பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள புகழ்பெற்ற அழகப்பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஏகதின லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு சுதர்ஸன ஹோமம், திவ்விய பிரபந்த சேவார்த்தியும் நடைபெற்றது. தொடர் நிகழ்வாக வேத பண்டிதர்களின் மந்திரங்கள் முழங்க காலை 9 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கியது.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கபட்டது.
வேந்தன்







