25.5 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் மழை இந்தியா தமிழகம் செய்திகள்

ஜோராக தொடங்கிய தென்மேற்கு பருவமழை: இந்தியாவில் அதிக மழைப் பொழிவைத் தருமா?

கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை, ஒரு வார காலம் தாமதமாக இன்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதி வரை பொழியும். இந்த காலத்தில்தான் இந்தியாவில் அதிகமான மழை பொலிவு இருக்கும். இந்த காலத்தில் தான் விவசாயிகளும் சாகுபடி பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவர். அப்படிப்பட்ட இந்த தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டு ஒருவாரம் முன்கூட்டியே தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு ஒருவாரம் தாமதமாக தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில்தான் அரபிக்கடலில் பிபோர்ஜோய் புயல் உருவானது. இந்த புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை உருவாகுவதற்கான பகுதிகளில் உள்ள காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்படும் என்பதால் தென்மேற்கு பருவமழை தொடங்குவது தள்ளிப்போகும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர். அதற்கேற்ப கடந்த வாரம் முழுவதும் தென்மேற்கு பருவமழைக்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை.

தற்போது பிபோர்ஜோய் புயல் கராச்சிக்கு தெற்கே, ஓமன் நோக்கி நகர்ந்து விட்டது. இதன்காரணமாக லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்பட தொடங்கின. இதன்மூலம் அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்படி, கேரளாவில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளா, தென் தமிழ்நாடு, மன்னார் வளைகுடா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் தமிழ்நாட்டிலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பொழிவதற்கான சாதகமான சூழல்கள் நிலவுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்புக்கும் குறைவாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. காரணம் தற்போது புதிதாக உருவாகியுள்ள பைபர்ஜாய் புயல் தான். ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவுக்கு பெய்யும் என்று கூறியுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

அதிமுகவில் ஜூன் 23ந்தேதிக்கு முன் இருந்த நிலை என்ன?…யாருக்கு என்ன அதிகாரம்?…

Web Editor

அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு…திங்கள் முதல் விலை உயர்வு?…

Web Editor

ஜெய்ப்பூர் அரசு அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.31 கோடி, 1 கிலோ தங்கம் பறிமுதல்!!

Jeni