26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஹஜ் புனித யாத்திரை: 254 பேர் சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் சவுதி பயணம்..!!

ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் முதல் குழு சென்னையில் இருந்து இரண்டு தனி சிறப்பு விமானங்களில் சவுதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு சென்றுள்ளது. இவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்.

ஹஜ் புனித யாத்திரை பயணம்  தொடங்குவதை அடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் வரும் 29-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக புனித ஹஜ் யாத்திரைக்கு செல்வர். ஹஜ்ஜுக்கு செல்ல சவுதி அரேபியாவில் புனித மக்கா, மதினா  மெக்காவிற்கு செல்வார்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு, மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. அதோடு அவர்கள் குறைந்த விமான கட்டணத்தில், பயணிக்க தனி சிறப்பு விமானங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதைப்போல் சென்னையில் இருந்து ஜித்தா செல்லும் சிறப்பு விமானங்களில், தமிழ்நாடு, புதுச்சேரி, மாநிலங்களை சேர்ந்தவர்கள் சென்றனர்.

இந்த சிறப்பு தனி விமானங்கள் 21-ம் தேதி வரையில் இயக்கப்பட உள்ளன. இந்த விமானங்களில் சுமார் 4,000 க்கும் மேற்பட்டோர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இப்பயணிகள் சென்னையில் இருந்து ஜித்தா வழியாக, புனித தலமான மக்கா மதினா செல்கின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து  நேற்று இந்த விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 254 ஹஜ் பயணிகள் சென்றனர். இதனையடுத்து இரண்டாவது விமானம் இன்று  புறப்படுகிறது. அதில் 162 பயணிகள் புறப்பட உள்ளனர்.

இவர்களை சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார். இவர்கள் ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில், இதே போல் தனி சிறப்பு விமானங்களில் சென்னை திரும்புகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

ஊராட்சி மன்ற தலைவர் கொலை- குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

G SaravanaKumar

பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கேள்வி!

Gayathri Venkatesan

பெரும் எதிர்பார்ப்பில் நடக்கவுள்ள சிம்பு படத்தின் இசை வெளியீட்டு விழா

EZHILARASAN D