முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுபோதையில் மலைப்பாம்பை கையில் பிடித்து நடனமாடிய இளைஞர்!

கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு பகுதியில் ஹோட்டலில் புகுந்த மலை பாம்பை தூக்கி சாலைக்கு கொண்டு வந்து நடமாடிய போதை வாலிபர்,கையில் பாம்பு கடித்ததால் அலறியடித்து ஓட்டம் எடுத்த மக்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் பின் புறத்தில் சமையலுக்கு ஏரிக்க தேவையான விறகு கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன, இந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த விறகு கட்டையின் இடையே புகுந்து இருந்த மலை பாம்பு வெளியே செல்ல முடியாமல் பதுங்கி இருந்தது.

இந்த தகவல் காட்டு தீ போல அக்கம் பக்கம் பரவவே அதே வழியாக வந்த அகஸ்டின் என்பவர் மது போதையில் பாம்பை தூக்கி சாலைக்கு கொண்டு வந்து நடனமாடினர்,தொடர்ந்து பாம்பு அகஸ்டினின் கையில் கடித்ததால் அகஸ்டின் பாம்பை உதறி தள்ளினர்,இதனால் அருகில் நின்றவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடிக்கவே, பின்னர் வனத்துறை அதிகாரிகள் வந்து மலை பாம்பை எடுத்து சென்றனர்.

Advertisement:

Related posts

கும்பமேளா: மத்திய அரசின் மீது மல்லிகார்ஜூன் கார்கே விமர்சனம்

Gayathri Venkatesan

ஷூ தொழிற்சாலையில் தீ விபத்து: 4 பேர் மாயம்!

Vandhana

95 % பேர் தடுப்பூசி போடாதவர்கள்: ஆளுநர் தமிழிசை!