சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா!

சிவகாசி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில், ராட்சத கிரேனில் 200 அடி உயரத்தில் தொங்கியபடி பக்தர்கள் பறவை காவடி எடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றினா். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிவகாசி ஸ்ரீ மாரியம்மன் கோயில்…

சிவகாசி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில், ராட்சத கிரேனில் 200 அடி உயரத்தில் தொங்கியபடி பக்தர்கள் பறவை காவடி எடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றினா்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிவகாசி ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவின் முக்கிய நாளான நேற்று காலை முதல் பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், கயிறு குத்துதல், அழகு குத்துதல், பறவை காவடி எடுத்தல் என பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் பக்தர் ஒருவர் ராட்சத கிரேனில் சுமார் 200 அடி உயரத்தில் பறந்தபடி பறவை காவடி எடுத்து  வேண்டுதலை நிறைவேற்றினாா்.மேலும் இவ்விழாவை காண  சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

 

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.