சிவகாசி: பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விஜயா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இதில் சுமார் 55 அறைகளில் 150க்கும்…

சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விஜயா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இதில் சுமார் 55 அறைகளில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று வழக்கம் போல் தொழிலாளர் பணியாற்றிய நிலையில் ஒரு அறையில் பட்டாசு தயாரிக்கும் போடு உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அந்த கட்டடம் இடிந்து தரைமட்டமாகியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் ரவி என்ற பட்டாசு தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தார்.மேலும் ஜெயராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வெடி விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.