மொழிபெயர்ப்பு ஒப்பந்தங்கள் மூலம் தமிழுக்கு உலக வாசலை திறந்திருக்கிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் கடந்த 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதனை ஏராளமான மக்கள் பார்வையிட்டு, தனக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
https://twitter.com/Vairamuthu/status/1615903863252615168?t=Q6FvliXRrrztoSnPT8VMWw&s=19
இதில், தமிழ் மொழியிலிருந்து இந்திய மற்றும் உலக மொழிகளுக்கும், பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும், சிறந்த படைப்புகளை மொழிபெயர்க்கும் வகையில் பல்வேறு பதிப்பகங்கள் இடையே 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிலையில், மொழிபெயர்ப்பு ஒப்பந்தங்களை வரவேற்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தன்னுடைய மூன்றாம் உலகப் போர் நூல், மலையாளம் மற்றும் அரபி மொழியில் மொழிபெயர்க்கப்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.







