முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இடைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுமா?- 23ந்தேதி ஆலோசனை

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ந்தேதி மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வரும் 31ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்க உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொகுதி மறுசீரமைப்பு அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதி உருவாக்கப்பட்டபின் அங்கு முதல்முறையாக 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகதான் வென்றது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார்,  திமுக வேட்பாளர் எஸ்.முத்துசாமியைவிட 10,644 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக ஈரோடு கிழக்கு தொகுதியில் தோல்வியை தழுவியது. அந்த தேர்தலில் தேமுதிக வேட்பாளர் பொன்.சேர்மன் 6,776 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார்.

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் பொதுச் செயலாளராக உள்ள அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்திருந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி அமமுகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தேமுதிக ஆதரவுடன் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் முத்துக்குமரன் 1,204 வாக்குகளையே பெற்றார்.

இந்நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  இந்த தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக வரும் 23ந்தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 23ந்தேதி காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

உட்கட்சி தேர்தல், இடைத் தேர்தல், செயற்குழு, பொதுக்குழு மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-எஸ்.இலட்சுமணன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை புத்தகக் காட்சியில், முகக்கவசத்தோடு கையுறையை கட்டாயமாக்குக!

Arivazhagan Chinnasamy

பாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும்: தமிழ்நாடு அரசு

Arivazhagan Chinnasamy

சீனாவில் தாண்டவமாடும் கொரோனா – அதிகரிக்கும் உயிரிழப்புகள்

G SaravanaKumar