சிவகங்கை பேருந்து நிலையத்தினுள் கடந்த ஒரு வாரமாக மழைநீர் தேங்கியதால் குளம் போல் பேருந்து நிலையம் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தை வாட்டி வதைத்த வெயில் சற்றே தணிந்து மழை பெய்ய துவங்கி உள்ளது.சிவகங்கை மாவட்டத்திலும் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று காலையில் சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் சிவகங்கை நகர் முழுவதும் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதைபோல் பேருந்து நிலையத்தினுள்ளும் மழைநீர் குளம் தேங்கியது.வெளியேற போதிய இடவசதியின்மையினால் மழைநீர் தேங்கியது.இதனால் பள்ளி விட்டு வந்த மாணவ,மாணவிகள் தண்ணீரில் நனைந்தப்படியே சென்றனர்.
மழைநீருடன் சாக்கடை நீரும் கலப்பதால் நோய்தொற்று உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மழைநீரை விரைந்து அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







