சிவகங்கை பூமாயி அம்மன் கோயில் வசந்த விழா-பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற வசந்த விழாவை முன்னிட்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது…

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற வசந்த விழாவை முன்னிட்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு பூமாயி அம்மன் கோயில்.இக்கோயில் இச்சுற்றுவட்டாரத்தில் மிகவும் புகழ்பெற்றதாகும்.இக்கோயில்
13 ஆண்டுகளுக்கு வசந்த விழா கடந்த 11ம் தேதி காப்பு கட்டுதலுடன் வெகுவிமர்சையாக தொடங்கியது.திருவிழா தொடங்கியது முதல் பக்தர்கள் விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தனர். திருவிழா காலங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விதவிதமான அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் சிகர நிகழ்வான ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைப்பெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மூலவர் தங்க கவசத்திலும்,உற்சவரான அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அம்மனின் திருத்தேர் அறுமுகம்பிள்ளை வீதி,மதுரை சாலை உள்ளிட்ட வீதிகள் வழியாக உலா வந்து கோயிலை வந்தடைந்தது.தேர் பவனி வந்த வழியெங்கும் வழி நெடுக காத்திருந்து அர்ச்சனை செய்து வழிப்பட்டனர்.

மேலும் மேளதாளங்கள் முழங்க இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் திருத்தேர் முன்னால் உற்சாகமாக ஆடி மகிழந்தனர்.இத்திருவிழாவில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.