தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், காதலர் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘மாமன்னன்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இது தவிர ’ரிவால்வர் ரீட்டா’ மற்றும் ‘சைரன்’ ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
அண்மையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் “தசரா” திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் துபாயைச் சேர்ந்த ஃபர்ஹான் பின் லியாகத் என்ற தொழிலதிபர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவர் தான் உங்கள் காதலரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாகச் சொல்லப்பட்ட தொழிலதிபர் இவர்தானா என்கிற பேச்சு அடிபடத்தொடங்கி உள்ளது.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் என்னுடைய நண்பரை இந்த விஷயத்தில் இழுக்காதீர்கள். எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது அந்த மர்ம நபர் யார் என்பதை தெரிவிப்பேன். அதுவரை பொறுங்கள் என தெரிவித்துள்ளார்.








