பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், நெசவாளர்களிடம் வாக்கு சேகரிக்க சென்று தறி நெய்து வாக்கு சேகரித்தார்.
பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், அனகாபுத்தூர், பம்மல் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிக்க சென்ற அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தறி நெய்யும் இடத்திற்கு சென்ற சிட்லபாக்கம் ராஜேந்திரன், தறி நெய்து நெசவாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது நெசவாளர்களிடம் பேசிய சிட்லபாக்கம் ராஜேந்திரன், அதிமுக அரசு நெசவாளர்களுக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை செய்து கொடுத்துள்ளதாகவும், மீண்டும் அதிமுக ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் நெசவாளர்களிடம் கேட்டுகொண்டார்.







