நன்னிலம் தொகுதி எனக்கு கிடைத்தது பெரிய பாக்கியம்: அமைச்சர் காமராஜ்!

நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் காமராஜ் நன்னிலம் தொகுதி தனக்கு கிடைத்தது பெரிய பாக்கியம் என்றும் அதற்க்காக தான் மட்டுமல்லாமல் தனது சந்ததியே உங்களுக்கு கடமைபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில்…

நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் காமராஜ் நன்னிலம் தொகுதி தனக்கு கிடைத்தது பெரிய பாக்கியம் என்றும் அதற்க்காக தான் மட்டுமல்லாமல் தனது சந்ததியே உங்களுக்கு கடமைபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் அதிமுக சார்பில் தொடர்நது மூன்றாவது முறையாக போட்டியிடும் அமைச்சர் காமராஜ், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். ஏனங்குடி, சன்னாநல்லூர், பனங்குடி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சருக்கு, அப்பகுதி மக்கள் தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய காமராஜ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தொகுதி மக்களின் பிராத்தனை மூலம் மறு பிறவி எடுத்த தனக்கு மீண்டும் நன்னிலம் தொகுதி கிடைத்தது பெரிய பாக்கியம் என்றும் என்றும் அதற்க்காக தான் மட்டுமல்லாமல் தனது சந்ததியே உங்களுக்கு கடமைபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து இதே தொகுதியில் இரண்டு முறை தன்னை வெற்றிபெற வைத்த மக்கள் நீங்கள் இந்த முறையும் தங்களுக்கு சேவையாற்ற அதிக வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். திறந்த வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சருடன் பாமக, பிஜேபி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.