முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

பிரேத பரிசோதனைக்குப் பணம் கேட்ட எஸ்ஐ; ஆயுதப்படைக்கு மாற்றம்

SI Shekar

திருச்சி துறையூரில் பிரேத பரிசோதனைக்குப் பணம் கேட்ட எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் சரத் (24). இவர் நேற்றைய தினம் தனது குழுவினரோடு துறையூர் – பெரம்பலூர் சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மணவறை அலங்கரிக்கும் பணிக்குச் சென்றுள்ளார். அப்போது வேலையின் நடுவே இரும்புக் குழாய் தூக்கிச் சென்றபோதுத் தவறுதலாக உயரழுத்த மின்கம்பி ஒன்றில் மோதினார். இதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்ட சரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

thuraiyur

இதனையடுத்து துறையூர் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வந்தார். பின்பு பிரேத பரிசோதனைக்காக சரத்-ன் உறவினர்களிடம் எஸ்.ஐ. சேகர் ரூ.5000 பெற்றுக்கொண்டதாகவும் இன்னும் கூடுதலாக பணம் கேட்டதாகவும் உறவினர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து அந்த புகாரின் அடிப்படையில் எஸ்.ஐ சேகர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து இறந்த இளைஞரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு உறவினர்கள் ரூ.5000 பணம்கொடுத்தும் கூடுதல் பணம் கேட்ட காவல் உதவி ஆய்வாளர் செயல்பாடு தங்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துவதாகக் காவல்துறை வட்டாரங்கள் வருத்தம் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கூடங்குளம் அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்!

Vandhana

டாஸ்மாக் பார், திரையரங்குகளை மூட வேண்டும்: வழக்கு!

Ezhilarasan

‘ஜெயலலிதா ஆட்சியை அளிக்க விரும்புகிறேன்’ – சசிகலா

Arivazhagan CM