முக்கியச் செய்திகள் தமிழகம்

திருச்சி: யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு நிதி

திருச்சி அருகே உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு பல்வேறு செலவினங்களுக்காக தமிழ்நாடு அரசு நிதி ஒதிக்கீடு செய்துள்ளது.

திருச்சி சமயபுரத்தை அடுத்த எம்ஆர் பாளையத்தில் செயல்பட்டு வரும் யானைகள் மறுவாழ்வு மையத்தில், தற்போது 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு நிதி பற்றாக்குறை இருப்பதால், போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மறுவாழ்வு மையத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இது குறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இந்நிலையில், யானைகள் மறுவாழ்வு மையத்தில் பல்வேறு செலவினங்களுக்காக 98 லட்சத்து 27 ஆயிரத்து 610 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், யானைகளுக்கு பச்சை தீவனங்கள் வழங்க 62 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், இதர பராமரிப்பு பணிக்காக 4 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயும், மருத்துவ செலவுகளுக்கு 2 லட்சத்து 59 ஆயிரத்து 998 ரூபாயும் ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஐபிஎல் வீரர்கள் காலக்கெடு இன்றோடு முடிவு: தோனி, கோலி, ரோகித் தக்கவைப்பு

Halley Karthik

‘முஜிப்’ உடை, காளி கோயில் வழிபாடு: வங்கதேசத்தில் மோடி!

எல்.ரேணுகாதேவி

கேஜிஎப்-2 படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

Gayathri Venkatesan