டெல்லி செங்கோட்டையில் அத்துமீறி நுழைய முயன்ற குழுவினரால், போலீசார் விரட்டி, விரட்டி தாக்கப்படும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய முயன்ற குழுவினர், அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை விரட்டி விரட்டி தாக்கினர். போராட்டகாரர்களின் பிடியில் இருந்து தப்பிக்க, மதில் சுவருக்கு கீழே உள்ள அகழியில் போலீசார் ஒருவர் மீது ஒருவர் விழுந்து ஓடும் காட்சியும், அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே, டிராக்டர் பேரணி வன்முறையில் 83 போலீசார் காயமடைந்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், எட்டு பேருந்துகள் மற்றும் 17 தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். கிழக்கு டெல்லி பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதற்காக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.