டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் சமூக விரோத சக்திகள் ஊடுருவி விட்டதாக விவசாய சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
சிங்கு எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாய சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், டிராக்டர் பேரணியில் விரும்பத்தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள் நடந்ததற்கு கண்டனமும், வருத்தமும் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளது. அதேநேரம், இதுபோன்ற செயல்களில் விவசாயிகள் ஈடுபடவில்லை என்றும், சில சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாகவும் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் உடனடியாக அந்தந்த போராட்ட களங்களுக்கு திரும்புமாறும் விவசாய சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தங்களின் போராட்டம் அமைதியாக தொடரும் என்றும், அடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கம் அறிவித்துள்ளது.