‘பதான்’ திரைப்படத்திற்கான டிரெய்லர் ஒளிபரப்பு நிகழ்ச்சி துபாய் புர்ஜ் கலிஃபாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்துகொண்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்திய திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவரது நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியிருப்பதுதான் ‘பதான்’ திரைப்படம். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், டிம்பிள் கபாடியா மற்றும் அசுதோஷ் ராணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளுக்கு வர உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து படத்தில் இடம்பெறுள்ள ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளானது. அந்த பாடல் வீடியோ காட்சியில் தீபிகா, காவி நிற பிகினியில் கவர்ச்சியாகவும், ஷாருக், பச்சை நிற ஆடை அணிந்து டூயட் பாடுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன . இதனால் காவி நிறம் அவமதிக்கப் பட்டுள்ளதாகக் கூறி இந்து அமைப்பை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் மத உணர்வை புண்படுத்தும் வகையில் ‘பதான்’ படம் இருப்பதாகக் கூறி, அதனைத் தடை செய்ய வேண்டும் என்று வழக்குகளும் தொடுக்கப்பட்டது.
இந்நிலையில் பதான் திரைப்படத்திற்கான டிரெய்லர் ஒளிபரப்பு நிகழ்ச்சி துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்துகொண்டு ரசிகர்களோடு இணைந்து ‘பதானின் டிரெய்லரைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.
Pathaan on 🔝, literally!#PathaanTraileronBurjKhalifa
Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you on 25th January. Releasing in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/uGoSpqo03M
— Yash Raj Films (@yrf) January 14, 2023
இரண்டரை நிமிடம் ஒளிபரப்பட்ட பதான் டிரெய்லரில், ஜான் ஆபிரகாம் இந்தியாவில் தாக்குதலைத் திட்டமிடுவது போலும், SRK மற்றும் தீபிகா ஆகிய இருவரும் ஒரு சக்திவாய்ந்த எதிரிக்கு எதிராக நிற்கும் உளவு முகவர்களாகக் இருப்பது போன்றும் காட்டப்படுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.இதில் ஒரு புகைப்படத்தில் ஷாருக்கான் தனது கையெழுத்து போஸில் புர்ஜ் கலிஃபா முன்பு நின்று போஸ் கொடுக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச லீக் டி20 போட்டியையும் கண்டு மகிழ்ந்தார். இதுதவிர ஸ்டேடியத்தில், நடிகர் பார்வையாளர்களுடன் ரசிகர்களுடன் கைகுலுக்கி, முத்தங்களை வழங்கி , கைகளை அசைத்து, வரவிருக்கும் ‘பதான்’ படத்திலிருந்து தனது சின்னமான டயலாக்கை அவர்களுக்கு வழங்கினார்.
இந்நிலையில் பதான் படத்தின் சர்வதேச விநியோக உரிமையை பெற்றுள்ள, அதன் உரிமையாளர் பேசும் போது இப்படத்திற்கு அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. புகழ்பெற்ற புர்ஜ் கலிஃபாவில் படத்தின் ட்ரைலரை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் பெருமை படுகிறோம்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் ஷாருக்கான் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.ஷாருக்கான் மீது அவர்கள் காட்டும் அன்பிற்கு மிகவும் நன்றி என கூறினார்.
‘பதான்’ படத்திற்குப் பிறகு, நடிகர் ராஜ்குமார் ஹிரானியின் ‘டன்கி’ படத்திலும், டாப்ஸி பண்ணு மற்றும் அட்லீயின் ‘ஜவான்’ படத்திலும் ஷாருக்கான் நடித்து வருகிறார். சமீபத்தில், படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை ஆன்லைனில் வெளியிட்டது தயாரிப்பாளர்கள் ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.