விராட் கோலி, சுப்மன் கில் சதம் – இலங்கைக்கு  391 ரன்கள் இலக்கு

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு 391 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்தியா – இலங்கை இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.…

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு 391 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

இந்தியா – இலங்கை இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதனைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் அதிரடியாக விளையாட தொடங்கினர். 95 ரன்கள் வரை இவர்களது பார்ட்னர்ஷிப் நீடித்தது.

ரோஹித் சர்மா கருணாரத்னே வீசிய பந்தில் அவுட் ஆனார். பின்பு சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இணைந்து அதிரடியாக விளையாடினர். இருவருமே சமமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுப்மன் கில் சதமடித்தார். பின்பு 116 ரன்களுடன் ரஜித்தா பந்தில் போல்டாகி வெளியேறினார்.

பின்பு கோலியுடன் கைகோர்த்த ஷ்ரேயாஸ் ஐயர் கோலிக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்து விளையாட தொடங்கினார். விராட் கோலி தனது 46 சதத்தை பூர்த்தி செய்தார். இறுதிவரை அவுட் ஆகாமல் விளையாடிய கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் அடித்துள்ளார். இதில் 13 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும்.

50 ஒவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 390 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணியில் ரஜித்தா மற்றும் குமாரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.