விஜய்சேதுபதி மிகச்சிறந்த நடிகர் என ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
ஹிந்தில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ஜவான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தல் நடிக்கின்றனர்.
தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டுங்கி, ஜவான் இரு படங்களில் எது சவாலாக இருந்தது என மற்றொரு ரசிகர் கேட்டார். ஜவான் படத்தில் நடித்தது சவாலாக இருந்ததாக அவர் கூறினார்.
ஜவான் வில்லன் குறித்து சொல்லுங்க ஷாருக் என மற்றொரு ரசிகர் கேட்டார். விஜய் சேதுபதி சிறந்த நடிகர். ஜவான் படத்தில் மிகவும் கூலாக காணப்படும் விஜய் சேதுபதி, எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் என்றும் ஷாருக்கான் குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: