குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய நபர் ! – உயிரை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர் !!

குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவரை சாதுர்யமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தி உயிரை காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேரள மாநிலம் கொல்லம் அருகே கொல்லம் – புனலூர்  இரயில், எழுகோன் ரயில்…

குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவரை சாதுர்யமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தி உயிரை காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கேரள மாநிலம் கொல்லம் அருகே கொல்லம் – புனலூர்  இரயில், எழுகோன் ரயில் நிலையத்தை நெருங்கும் போது, தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருப்பதை பார்த்து ரயில் ஓட்டுநர் ரயிலை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்து நிறுத்தினார்.

பின்னர்,உள்ளூர் மக்கள் உதவியுடன்‌ அந்த நபரை தண்டவாளத்தை விட்டு வெளியேற்றினர். இதை தொடர்ந்து அந்த நபர் எழுகோன் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். காவல் துறையினரின் விசாரணையில் அச்சன்கோவிலைச் சேர்ந்த ரெஜி(39 )என அடையாளம் காணப்பட்டது. தொடர்ந்து அந்த நபர் குடிபோதையில் இருந்ததால், அவரது குடும்பத்தினரை வரவழைத்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.‌

சாதுரியமாக செயல்பட்டு அவரின் உயிரை காப்பாற்றிய ரயில் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

– சே.அறிவுச்செல்வன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.